வலி அல்லது கவலை
என்பது அவரவரது மனதைப் பொறுத்தே அமைகின்றது. குடும்பம், தொழில், பொருளாதார தேவைகள்
போன்றவற்றை நினைக்கையில் கவலை என்பது தானாக வந்து ஒட்டிக் கொள்கின்றது. எனக்கு மட்டும்
ஏன் இதெல்லாம் நடக்கின்றது? நான் மட்டும் மிகவும் சிரமப்படுகின்றேனே.எனது பிரச்சனைகளுக்கு
ஒரு விடிவுகாலம் பிறக்காதா என மனம் ஏங்கித் தவிக்கின்றது. கவலைகள் அதிகரித்து நிலைத்தடுமாறும்போது
மனதின் ரணத்தைக் குணப்படுத்த, கட்டுப்படுத்த வடிகால் ஒன்று தேவைப்படுகின்றது. பொதுவாக
கவலைக் கொள்ளும்போது நாம் தேடுவது (முறையிடுவது) கடவுளைதான். நமது குறைகளை அவர் தீர்த்து
வைப்பார் என்ற நம்பிக்கைதான். இருப்பினும் பிரச்சனைகள் தீர்ந்ததா? விடை தேட முயன்ற
போது ஆங்கிலத்தில் இருந்த இக்கட்டுரை கண்ணில் பட்டது. எம் இறைவன், நாங்கள் போற்றும் சாய்நாதரின்
ஆசியுடன் தமிழ் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என இக்கட்டுரையை இதனை மொழிபெயர்த்து வழங்குகின்றோம்.
இக்கலியுகத்தின் கடவுள், மக்கள் குறைகளைத்
தீர்க்கும் மகா அவதாரம், எனப் பூஜிக்கப்படும் ஷிர்டி நாதனின் பக்தர்களுக்காகவும் ஏனைய
குருவைப் போற்றும் பக்தர்களுக்கு இக்கட்டுரை பயன்படும் என நம்புகின்றோம்.
.“நீயே சரணம் என்று தஞ்சம் அடைந்த பக்தனின் துன்பத்தையும் சாயி
ஏற்பார்”
இவ்வாக்கு சாய் நாதர் அவர்
பக்தர்களின் மேல் கொண்டுள்ள உள்ளன்பின் வெளிப்பாடே ஆகும். துன்பத்தை அவர்
காலடியின் கீழ் வை; அடுத்தகட்ட வேலையை கவனி; சாய் பாபாவின் மீது உறுதியான
நம்பிக்கை வை; கண்டிப்பாக நிலைமை மாறும். இது அவர் பக்தர்கள் தங்கள் வாழ்வில் கண்ட
உண்மை அனுபவங்கள் ஆகும். பிரச்சனை உள்ளவர்கள் உங்கள் மானசீக குருவை நினைத்து இதனைக்
கடைப்பிடியுங்கள்:
- வரும் நாட்களில் என் நிலைமை மாறும் என நம்புங்கள்
- சாய் என் வலியை மாற்றுவார் என திடமாக நம்புங்கள்
- சாய் ஆதரவு என்றும் எனக்கு உண்டு என மனதார எண்ணுங்கள்
- சாயிடம் உள்ள சக்தி என் நோய்களைக் குணப்படுத்தும் கண்டிப்பாக நானும் சாயின் அருளால் குணமாவேன் என மனதார நம்புங்கள்
உங்களுடைய
கவலைகள் அனைத்தையும் சாய் பாபாவின் திருப்பாதங்களின் அடியில் வையுங்கள்.உங்கள் நண்பர்களோ,
உறவினர்களோ உங்கள் பிரச்சனைகளைப் பற்றி என்ன கூறினாலும் கவலைப்படாதீர்கள். சாய் பாபாவை
முழுமனதோடு நேசிப்பது எப்படி என்பதை மட்டும் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மனம் முழுவதும்
சாய், சாய், சாய் என நிறைந்திருக்க வேண்டும்.ஒவ்வொரு நொடியும் சாய் பாபாவை நினைக்க
வேண்டும், அவரின் சச்சரித்திரம் பாமாலைகளை நாவும் பாடிட வேண்டும். இவ்வாறு சாய் நாதரை
உங்கள் உடல் முழுவதும் நிரப்பினால் உங்கள் தேவைகளை அவர் நிறைவேற்றுவார். சித்திகள்
அனைத்தும் கொண்ட சாய் மகானின் நினைவுகளே உங்கள் மனதின் காயங்களை குறிப்பாக உடல் நலக்குறைவைப்
போக்கும் அருமருந்து. -வளரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக